சென்னை, அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த 4 எம்.எல்.ஏ.க்களும் ஆகஸ்டு 4-ந் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்துள்ளார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். சபாநாயகர் அழைப்பு இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டப்படி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கும்படி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற அ.தி.மு.க. தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் மனு அளித்திருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி 4 பேருக்கும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அழைப்பு விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் சபாநாயகரிடம் விளக்கம் அளித்தனர். ஆகஸ்டு 4-ந் தேதி இந்த நிலையில் மீண்டும் விளக்கம் அளிக்க 30-ந் தேதி (இன்று) வரும்படி 4 பேருக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமியும் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தார்.இந்த நிலையில் ஆஜராக வேண்டிய தேதியை வரும் ஆகஸ்டு 4-ந் தேதிக்கு மாற்றி சட்டசபை செயலகம் அறிவுறுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமி 4 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அளித்த விளக்கத்தின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது. அந்த விளக்கங்களை சபாநாயகர் தந்த பிறகுதான் சபாநாயகர் முன்பு ஆஜராவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே கூறியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/what-is-the-reason-for-resigning-speaker-orders-4-mlas-to-provide-an-explanation




