காத்மாண்டு, நேபாளம் - திபெத் எல்லையில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால், பிரமாண்ட பனிப்பாறை சரிந்து போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில், ஆற்றின் கரையோர கட்டிடங்கள், பாலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை கண்இமைக்கும் நேரத்தில் அடித்துச் செல்லப்பட்டன. திடீர் வெள்ளம் காரணாமாக நேபாளத்தின் 3 மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270-ஐ கடந்திருக்கும் நிலையில், மேற்கொண்டு ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேபாளத்தின் ரசுவா உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக, காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 40 தனியார் ஹெலிகாப்டர்கள் புறப்பட்டு சென்றுள்ளன. இந்த ஹெலிகாப்டர்களின் பயணம் நேபாள ராணுவத்தால் ஒருங்கிணைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. நிவாரணப் பொருட்கள் தனியார் ஹெலிகாப்டர்களில் ஏற்றப்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த பணியில் இதுவரை 40 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 ஹெலிகாப்டர்கள் விமான நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/nepal-floods-relief-supplies-being-transported-in-40-private-helicopters



