மதுரை, மதுரையில் தொடங்கப்பட்டுள்ள தனியார் ஹெலிகாப்டர் சேவை மூலம் 30 நிமிடத்தில் திருச்செந்தூர் செல்ல முடியும். சுற்றுலாவுக்கு ஹெலிகாப்டர் சேவை மதுரை வளர்ந்து வரும் சுற்றுலா நகரமாக உள்ளது. இந்த நிலையில் மதுரையை மையமாக கொண்டு ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கான தனியார் ஹெலிகாப்டர் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இதற்கான ஹெலிகாப்டர் இறங்கு தளம் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களில் திருச்செந்தூர் செல்ல முடியும் இதன் மூலம் மதுரையில் இருந்து சுமார் 30 நிமிடங்களில் திருச்செந்தூர் செல்ல முடியும். இதே போல் ராமேசுவரம் மற்றும் கொடைக்கானலுக்கு சுமார் ½ மணி நேரத்தில் செல்லலாம். 1 மணி நேரம் 10 நிமிடங்களில் சென்னைக்கு செல்லலாம் சென்னைக்கு ஒரு மணி நேரம் 10 நிமிடங்களிலும், பெங்களூருவுக்கு 1½ மணி நேரத்திலும் செல்லலாம். அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி உண்டு. ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், இதில் 5 பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/helicopter-service-in-madurai-you-can-go-to-tiruchendur-in-30-minutes



