வேலூர், வேலூரில் சிறிய விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள். 1 அடி சிலை முதல் 10 அடிக்கும் மேலான பிரம்மாண்ட சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும். அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். பின்னர் ஆங்காங்கே வைக்கப்பட்ட 2 நாட்கள் கழித்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலை களில் கரைப்பார்கள். பக்தர்கள் பலர் தங்கள் வீடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள். அப்போது களிமண்ணால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகளை வீட்டில் வைத்து அருகம்புல் சாத்தி, கொழுக்கட்டை படைத்து வழிபடுவார்கள். இதையொட்டி வேலூரில் சிறிய சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பணிகள் தீவிரம் இதுகுறித்து விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி கைகளால் சிலைகள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். ஆண்டு தோறும் எங்களுக்கு மண் தட்டுப் பாடு ஏற்படும். ஏரியில் களிமண் எடுக்க உரிய காலத்துக்குள் விரைந்து அனுமதி அளிக்கப்பட வேண்டும். கைகளால் தயாரிக்கும் சிலைகளை பொதுமக்களும் பலர் ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள். தற்போது வெயில் தாக்கம் உள் ளதால் தற்போதே நாங்கள் சிலை தயாரிப்பு பணியை தொடங்கி விட் டோம். சிலை அளவுக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்கிறோம், என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/idol-making-work-intensifies-in-vellore-ahead-of-vinayagar-chaturthi




