நத்தம், நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் 10-வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் இப்போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. 20 ஓவர்களில் 206 ரன்கள் முகிலேஷ் 26 பந்துகளில் 46 ரன்களும், சந்தோஷ் குமார் 19 பந்துகளில் 43 ரன்களும் விளாசினர். மேலும், அஜிதேஷ் 35 ரன்களும், சோனு யாதவ் 23 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. 207 ரன்கள் இலக்கு இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் அமித் சத்விக் அதிரடியாக விளையாடி நெல்லை பந்துவீச்சாளர்களை திணறடித்தார். வெறும் 31 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். மறுமுனையில் துஷார் ரஹேஜா 52 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தார். 18.1 ஓவரில் வெற்றி இறுதியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 207 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-tiruppur-defeats-nellai




