உலகில் அதிக பணக்காரர்கள் வசிக்கும் நாடு என்றால், அமெரிக்காதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால், சமீபத்திய வெளியான ஆய்வு அறிக்கையின் தகவல்கள் இதற்கு மாறான ஆச்சரியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளன. அதாவது, உலகின் அதிக செல்வந்தர்கள் வசிக்கும் நாடாக சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்தில் ஒருவருக்கான சராசரி ஆண்டு வருமானம் சுமார் 9 லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது ஏறத்தாழ ரூ.8.75 கோடி ஆகும். வங்கி, காப்பீடு, சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், மருந்து தயாரிப்பு, கைக்கடிகாரங்கள், சாக்லேட் உள்ளிட்டவற்றுக்கும் சுவிட்சர்லாந்து உலக அளவில் புகழ்பெற்றது. பொருளாதார உற்பத்தி இந்த பட்டியலில் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. அங்கு ஒருவருக்கான சராசரி மதிப்பு சுமார் 6 லட்சத்து 69 ஆயிரம் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்கா, உலக பொருளாதார உற்பத்தியில் சுமார் 26 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது.லக்சம்பர்க் 3-வது இடத்திலும், ஹாங்காங் 4-வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா 5-வது இடத்தையும், ஆசிய நாடான சிங்கப்பூர் 6-வது இடத்தையும் பிடித்துள்ளன. டென்மார்க் 7-வது இடத்தில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/sirappukatturaigal/do-you-know-which-country-has-the-highest-number-of-wealthy-people-2




