துபாய் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தாய்லாந்து அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா என மொத்தம் 8 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தாய்லாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 159 ரன்கள் ஸ்மிரிதி மந்தனா (19) ரன்களில் வெளியேறினார். ஷபாலி வர்மா அரை சதம் (64) விளாசினார். பிரதிகா ராவல் (22), பாரதி புல்மாலி (13) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கிரந்தி கவுட் ஆட்டமிழக்காமல் உள்ளார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 159 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், 160 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி தொடக்கம் முதல் அதிர்ச்சி அளித்தது. சாந்தம் (4), மாயா (6) மற்றும் நன்னாபத் (41) ரன்களில் ஆட்டமிழந்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 16.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தாய்லாந்து 65 ரன்கள் எடுத்திருந்தது. இதனால், இந்தியா 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/sports/cricket/womens-asia-cup-cricket-india-thrash-thailand-by-94-runs




