சென்னை, தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.14,370-க்கும், சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனையானது. நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், மாலையில் சவரனுக்கு ரூ.1,680 அதிரடியாக குறைந்தது. மொத்தத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து, ரூ.1,13,400-க்கும், கிராமுக்கு ரூ.195 குறைந்து ரூ.14,175-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-drops-rs-1800-per-sovereign-todays-rate




