காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே, டெல்லியில் மாணவர்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தி, மத்திய அரசையே இறங்கி வரச் செய்தார். இப்போராட்டத்தால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். போராட்டம் முடிந்து அனைத்து மாணவர்களும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்ட நிலையில், அபிஜீத் திப்கேயும் மகாராஷ்டிராவில் உள்ள தனது ஊருக்குத் திரும்பி இருக்கிறார். மத்திய அரசு போராட்டத்தின்போது மாணவர்கள் மீது பதிவுசெய்த வழக்குகளை உடனே ரத்து செய்யவில்லையெனில், மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளார். இதனால் ஜந்தர் மந்தர் பகுதியில் மத்திய அரசு தடுப்புகளை அமைத்துள்ளது. இந்நிலையில் சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உத்தவ் இதில் டெல்லியில் நடந்த போராட்டத்திற்கு உத்தவ் தாக்கரே பாராட்டு தெரிவித்தார். இந்தச் சந்திப்பு வீடியோ கால் மூலம் நிகழ்ந்தது. இதில் திப்கேவின் தாயார் உத்தவ் தாக்கரேயுடன் பேசினார். நாடு முழுவதிலுமிருந்து அவருக்குத் திருமண வரன்கள் வந்துகொண்டிருப்பதால், திப்கேவின் திருமணம் குறித்து அவர்கள் உரையாடியதாகக் கூறப்படுகிறது. திப்கேயிடம் தனது வீட்டிற்கு வரும்படி உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த திப்கே, `நான் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறேன். அப்போது மும்பை வருகிறேன். உங்கள் வீட்டிற்கு வருகிறேன். ஆனால், நான் எந்தக் கட்சியிலும் சேரும் திட்டம் இல்லை' என்று அவர் தெளிவுபடுத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/trending/uddhav-thackeray-invites-abhijit-dipke-dipke-tactfully-declines




