திருப்பதி. தெலுங்கானாவில் கள்ளக்காதலி, கணவனை போலீஸ்காரர் கொன்று புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டம், மோட்டோ, பிக்யா தாண்டாவை சேர்ந்தவர் நாகுலு (வயது 48). இவரது மனைவி பூபா (41). இவர்களது 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவர்க ளுடன் வசித்து வருகின்றனர். மகளுக்கும் மருமகனுக்கும் ஏற்பட்ட தகராறு, காரணமாக அடிக்கடி போலீஸ் நிலையத்திற்கு சென்று வந்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் ஷெரிப் என்பவருடன் பூபாவுக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டது. பூபாவுடன் ஷெரிப் அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ஷெரிப்பிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தை வாங்கி தனது மருமகனுக்கு கொடுத்து இருந்தார். இந்த நிலையில் ஷெரிப்பிற்கு அவர்களது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனால் கொடுத்த பணத்தை ஷெரிப் திருப்பி கேட்டார். பணத்தை கேட்டால் வருங்கால மனைவியிடம் கள்ளக்காதலை தெரிவித்து விடுவேன் என பூபா மிரட்டினார். மேலும் நாம் இருவரும் உல்லாசமாக இருந்ததை கூறி விடுவேன் என மிரட்டி வந்துள்ளார். இதனால் பிரச்சனையாகிவிடும் என யோசித்த ஷெரிப் பூபாவை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்து காத்துக்கொண்டிருந்தார் ஷெரிப். அதன்படி வங்கியில் ஆடு வாங்க லோன் வாங்கி தருகிறேன் என பூபாவிடம் கூறினார். வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்ய வரும்போது ஆட்டு கொட்டகையை காட்டுவதற்காக தயார் செய்யுமாறு கூறியிருந்தார். கடந்த வாரம் ஆட்டு கொட்டகையை பார்வையிடுவது போல் சென்று பூபாவை கொல்ல திட்டமிட்டார். அப்போது அவரது கணவரும் உடன் வந்ததால் பூபாவை கொலை செய்ய முடியவில்லை. இதனால் கணவன் மனைவி இருவரையும் கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக போலீஸ் நிலையத்திற்கு டீ கொண்டு வரும் சுந்தர் என்பவரின் உதவியை நாடினார். நேற்று முன்தினம் ஆட்டுக்கொட்டகையை பார்க்க வேண்டும் என நாகுலுவை அழைத்துச் சென்றனர். அப்போது நாகுலுவை ஷெரிப் கட்டையால் தாக்கி கொலை செய்து ஆட்டு எருவை கொட்டுவதற்காக இருந்த குழியில் போட்டு புதைத்தார். பின்னர் சுந்தர் பூபாவின் வீட்டிற்கு சென்று அவரை அழைத்து வந்தார். அங்கு வைத்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் அவரையும் ஷெரிப் கட்டையால் தாக்கி கொலை செய்து மற்றொரு குழியில் போட்டு புதைத்து விட்டு சென்றனர். நாகுலு, பூபா கொலை குறித்து போலீசாருக்கு தெரிய ரகசியமாக தகவல் தெரிய வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஷெரிப்பும் அவர்களுடன் சென்று இருந்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் சுந்தரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் போலீஸ்காரர் ஷெரிப் தான் காரணம் என தெரிவித்தார். போலீசார் ஷெரிப் மற்றும் சுந்தரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/two-including-constable-held-for-couples-murder-in-suryapet




