நாம்சி, சிக்கிமில் சுரங்க பணியில் வாயு கசிவு ஏற்பட்டதில் சிக்கி 10 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். நிலச்சரிவு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தின் நாம்சி மாவட்டத்தில் ஜொலுங்கே நகரில் சமர்டங் பகுதியில் சுரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்போது, நேற்று மதியம் திடீரென சுரங்க பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில், தொழிலாளர்கள் 27 பேர் உள்ளே சிக்கி கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். மீட்கும்பணி தீவிரம் சம்பவம் பற்றி அறிந்து மாவட்ட கலெக்டர் அனுபா தம்லிங் உடனடியாக அந்த பகுதிக்கு சென்றார். இதனை தொடர்ந்து, தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்தது. இந்த பணியில், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், சிக்கிம் போலீசார், தீயணைப்பு மற்றும் அவசரகால பணியாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கை உயர்வு இந்த விபத்து பற்றி சிக்கிம் முதல்-மந்திரி பிரேம் சிங் தமங் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நிலச்சரிவால், சுரங்கம் இடிந்து விழுந்து உள்ளது. மீட்பு பணிகள் பற்றி பிரதமர் மோடி என்னிடம் கேட்டு அறிந்து கொண்டார். தேவையான, சாத்தியப்பட்ட உதவிகள் வழங்கப்படும் என உறுதி கூறியுள்ளார் என்று தெரிவித்தார். இந்நிலையில் சுரங்க விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களின் உடல்கள் கேங்டாக் நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மீதமுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வீரர்களுக்கு பாதிப்புகள் எனினும், சுரங்கத்திற்குள் காணப்படும் வாயுவால், மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களுக்கு மயக்கம் மற்றும் சுயநினைவின்றி போவது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவால், பூமிக்கடியில் இருந்து இயற்கையாகவே இந்த வாயு கசிவு ஏற்பட்டிருக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தேடல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று நாம்சி மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/landslide-triggers-deadly-tunnel-collapse-in-sikkim-10-killed-rescue-ops-underway




