ஷஹத் நிலம்பூர் இயக்கத்தில், பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமாயா பிரசாத், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியிருக்கும் படம் 'பிரதம திருஷ்டியா குற்றக்கார்'. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பார்வதி திருவோத்து, "என் திரைப்பயணம் முழுவதும் நான் வெற்றியை நோக்கி மட்டுமே பயணித்திருக்கிறேன். ஒரு படம் ஹிட் ஆவது என் கையில் இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் 100 சதவிகித உழைப்பை நேர்மையான நடிப்பைக் கொடுப்பது மட்டுமே என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பிரதம திருஷ்டியா குற்றக்கார் பார்வதி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், அதில் நிச்சயம் ஏதேனும் விஷயம் இருக்கும்' என்று மக்கள் சொல்வதுதான் எனக்கு உண்மையான வெற்றி மற்றும் விருது. ஒரு படத்தில் முதன்மைப் பாத்திரமோ, துணைப் பாத்திரமோ அல்லது சிறப்புத் தோற்றமோ எதுவாக இருந்தாலும் அந்தப் படம் எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். "ரஜினி சார் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க, ஆனா."- 'மொத ராத்திரி' நடிகர் ரிஷிகாந்த் 'பிரதம திருஷ்டியா குற்றக்கார்' திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு குழந்தையின் கனவு நனவானது போல உணர்கிறேன். சமூக வலைத்தளங்களில் வரும் ஒவ்வொன்றையும் படித்து இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறேன். 'பெங்களூர் டேஸ்' படத்திற்குப் பிறகுதான் என் சொந்த படங்களை ஒரு பார்வையாளராகப் பார்த்து ரசிக்கக் கற்றுக்கொண்டேன். பார்வதி திருவோத்து 'பிரதம திருஷ்டியா குற்றக்கார்' படத்தைப் பொறுத்தவரை, வெளியீட்டிற்கு முன் நான் முழுப் படத்தையும் பார்க்கவில்லை. டப்பிங்கின் போது மட்டுமே சில காட்சிகளைப் பார்த்தேன். அதனால் திரையரங்கில் மற்ற பார்வையாளர்களைப் போலவே நானும் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் படத்தைக் கண்டு ரசித்தேன்" என்று நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/actress-parvathy-thiruvoth-sharing-carrier-and-prathama-drishtya-kuttakkar-sucess



