சென்னை, உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில் பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டம் இதுதொடர்பாக வெளியிடப்படுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி கூட்ட அரங்கில், பொதுவிநியோக திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன், மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் 22.09.2026 அன்று பொது விநியோகத்திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. பொது விநியோகத் திட்டம் இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், அனைத்து மாவட்ட துணைப்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்), குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையின் உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கணினி மேலாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகளான புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களுக்கு தீர்வு, புதிய நியாய விலைக் கடைகள் திறப்பு, நியாய விலைக் கடைகள் தணிக்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கைப்பற்றுகை ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன. கைப்பேசி ஆய்வு செயலி மேலும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அவர்களால் சட்டப்பேரவையில், “துறைசார்ந்த அனைத்து அலுவலர்களும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கிடங்குகளை தணிக்கை செய்ய ஏதுவாக பொது விநியோகத் திட்ட கைப்பேசி ஆய்வு செயலி உருவாக்கப்படும்” என்ற அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக (22.09.2026) அன்று பொது விநியோகத்திட்ட கைப்பேசி ஆய்வு செயலி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இக்கூட்டத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அஜய் யாதவ், இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஜி.லதா, இ.ஆ.ப., குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் காவல் துறை தலைவர் ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., மற்றும் பொது விநியோகத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/review-meeting-on-the-public-distribution-system-ministers-participate




