கோவை கோவைக்கு வருகை தந்துள்ள துணை ஜனாதிபதிக்கு கவர்னர், அமைச்சர் வரவேற்பு அளித்தனர். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் சிறப்பு விமானத்தில் கோவைக்கு இன்று மதியம் வருகை தந்துள்ளார். அவரை கோவை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து தமிழக கவர்னர் அர்லேகர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் சம்பத் குமார், மாவட்ட கலெக்டர் பவன் குமார், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் இருந்தனர். தென்னிந்தியாவின் தேயிலை தொழிலுக்கு சேவையாற்றி வரும் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமாக உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளை திகழ்கிறது. இந்த அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாடு நீலகிரி மாவட்டம் குன்னூரில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார். குன்னூர் பயணம் 1926-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஒரு சிறிய தேயிலை சோதனை நிலையமாக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது, தென்னிந்திய தேயிலை தோட்ட உரிமையாளர் சங்கத்தின் கீழ், தேயிலை விவசாயம் மற்றும் உற்பத்தி தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக பாடுபடும் சர்வதேச அளவிலான முதன்மை ஆராய்ச்சி நிறுவனமாக இது உருவெடுத்துள்ளது. இதனை முன்னிட்டு, சாலை வழியாக துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நீலகிரி மாவட்டத்தின் குன்னூருக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறார். அவருடைய வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதனை அடுத்து, 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் 2026-ம் ஆண்டு நிகழ்ச்சியை நாளை அவர் தொடங்கி வைக்க இருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-visits-coimbatore-governor-minister-welcome




