சென்னை, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களின் உத்தரப்படி மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் (History Sheet Rowdies), (Non-History Sheet Offenders), குற்ற குணத்தார் (Bad Characters), மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1,155 குற்றவாளிகள் கைது கடந்த 15.07.2026 முதல் 21.07.2026 வரை, சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் மீது மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கைகளின் போது 31,005 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர், அவர்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். பிடியாணைகள் பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றும் சிறப்பு நடவடிக்கையில் 15.07.2026 முதல் 21.07.2026 வரை மொத்தம் 2,906 பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணைகள் (NBW) நிறைவேற்றுதல் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கான தீவிர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில், பிணை அல்லது பத்திரப் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறும் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 269-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 384 வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில், பிணை அல்லது பத்திரப் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறும் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகள் மீது, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 269-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிணை ரத்து மேலும், பிணை நிபந்தனைகளை மீறியுள்ளதுடன், தொடர்ந்து மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றம் சாட்டப்பட்ட எதிரிகளுக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாநிலம் முழுவதும் உள்ள மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/special-operation-against-anti-social-elements-tamil-nadu-police-take-swift-action-arresting-1155-individuals




