மதுராந்தகம், மதுராந்தகம் தொகுதியை பொறுத்தமட்டில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகம் என்று கூறப்படுகிறது. இடைத்தேர்தல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும், அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள், வேட்பாளர்களின் பிரசாரத்தால் திருவிழா கோலம் பூண்டுள்ளது. மதுராந்தகம் தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்துக்குப் பிறகு, போலி வாக்காளர் பெயர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மதுராந்தகம் தொகுதியில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 636 பேர் வாக்களித்துள்ளனர். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 496 பேர்களும், பெண்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 75 பேர்களும், மூன்றாம் பாலினத்தவர் 65 பேர்களும் வாக்கு செலுத்தி உள்ளனர். பெண் வாக்காளர்களே அதிகம் 5 மாதங்களுக்கு பிறகு, மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மதுராந்தகம் தொகுதியில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 பேர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண்கள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 926 பேர்களும், பெண்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 797 பேர்களும், மூன்றாம் பாலினத்தவர் 65 பேரும் அடங்குவர். கடந்த தேர்தலை விட, இந்த இடைதேர்தலில் ஆண்கள் 430 பேரும், பெண்கள் 722 பேரும் அதிகரித்து, புதிதாக 1,152 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மதுராந்தகம் தொகுதியை பொறுத்தமட்டில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகம். எனவே மதுராந்தகம் தொகுதியில் வாகை சூடப்போவது யார் என்று தீர்மானிப்பவர்களாக, பெண்களே இருப்பார்கள் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/1152-new-voters-in-maduranthakam-constituency-women-set-to-determine-the-victory




