சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கல்தூணில் தலையை மோதி மனைவியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். குடும்ப பிரச்சினை சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் உய்யவந்தாள் (வயது 40). இவருக்கும் கொட்டகை போடும் தொழிலாளி பிரகாஷ்(37) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், தம்பதியரிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. கல்தூணில் தலையை மோதி மனைவி கொலை; வாலிபர் கைது நேற்றும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரகாஷ், மனைவி உய்யவந்தாளை தாக்கியுள்ளார். மேலும் தப்பியோடிய மனைவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள கல்தூணில் தலை மோதியதில் உய்யவந்தாள் பரிதாபமாக உயிரிழந்தார். பிரகாஷ் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-man-arrested-for-killing-wife-by-hitting-head-on-stone-pillar




