திருப்பூர், திமுகவுடன் கூட்டணி பேசவில்லை என எடப்பாடி பழனிசாமியால் சத்தியம் செய்ய முடியுமா? எனவும் அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பினார். அதிக மக்கள் செல்வாக்கு பெற்றவர் இது தொடர்பாக, தாராபுரம் கூட்டத்தில் அமைச்சர் அருணராஜ் பேசியதாவது;- ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் முதல்-அமைச்சர் விஜய்க்காக தன்னெழுச்சியாக மக்கள் வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் முதல்-அமைச்சர் விஜய். துபாய்க்கு சென்று தொழில் செய்யலாமா? என எதிர்க்கட்சியினர் யோசித்துக் கொண்டிருக்கின்றனர். திமுக-அதிமுக கூட்டணி திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்கலாமா? என கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திமுகவுடன் கூட்டணி பேசவில்லை என எடப்பாடி பழனிசாமியால் சத்தியம் செய்ய முடியுமா? அதிமுகவின் பொதுக்குழுவில் தொண்டர்களால் தனது பதவியை இழப்பார் எடப்பாடி பழனிசாமி. இடைத்தேர்தலில் திமுக-அதிமுக கூட்டணி என்பதை ஆதாரப்பூர்வமாக கூறுகிறேன். மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுகவுக்கு என்று டீலிங் பேசப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-is-the-most-popular-leader-in-india-minister-arunraj




