தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் விஜய் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா திடீரென கண்கலங்கி எமோஷனலாக பேசினார். சத்யபாமா சத்யபாமா பேசியதாவது, ' தலைவரைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. நான் இங்கே பார்ப்பதை கனவா நனவா என சொல்ல முடியவில்லை. நாங்கள் எத்தனையோ கூட்டத்துக்கு சென்றிருக்கிறோம். காசு கொடுத்து கூட்டத்தை கூட்டி வருவார்கள். உடனே கலைந்துவிடுவார்கள். ஆனால், இங்கே கூட்டம் அப்படியே காத்திருக்கிறது. புரட்சித் தலைவரை காண வரும் கூட்டத்தைப் போல இருக்கிறது. புரட்சித் தலைவரே மறுபிறவி எடுத்து வந்துவிட்டாரோ. எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் உடன்படிக்கை செய்துவிட்டு எங்களிடம் வந்து நான் முதலமைச்சர் ஆகப் போகிறேன் என மகிழ்ச்சியாக கூறினார். எடப்பாடி பழனிசாமி என்கிற தலைமை பிடிக்காமல்தான் நாங்கள் வெளியே வந்தோம். அந்தக் கட்சிக்கு நாங்கள் துரோகம் செய்யவில்லை. சத்யபாமா ஒரு இயக்கத்தின் பொதுச்செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆனந்த் அண்ணனே சாட்சி. பொதுச்செயலாளர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடப்பாடியே சாட்சி. ஒரு பெண் என்றும் பாராமல் வலைதளங்களில் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள். போனை பார்த்தே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான் என்ன தவறு செய்தேன்? அம்மாவுக்கு உண்மையாக இருந்தேன். திமுகவுடன் கூட்டணி பேசியதால்தான் நான் அந்த கட்சியிலிருந்து வெளியேறினேன். உங்களின் பதவி சுகத்துக்காக என்னை ஆபாசமாக பேசுகிறீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை.' எனக் கூறி கண்கலங்கி அழுதார். உடனே முதல்வர் விஜய் அவரின் தோளை தட்டி ஆறுதல் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/sathyabama-became-emotional-and-cried-on-stage-chief-minister-vijay-consoled-her-what-happened




