முதல்வர் விஜய் ஆய்வு நடத்திய எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு உதவியாக வரும் உறவினர்கள் வராண்டாவில் நெருக்கடியில் படுத்திருப்பதாக விகடன் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து நம்மை தொடர்புகொண்டு விளக்கம் கொடுத்தனர். மருத்துவமனை சார்பில் கொடுத்த படம் எழும்பூர் மருத்துவமனையின் இயக்குனர் குப்புலெட்சுமி பேசுகையில், "கடந்த ஆட்சியிலேயே முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியன் மாரத்தான் மூலம் திரட்டிக் கொடுத்த நிதியில் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு கடந்த ஜூலை மாதம் ஒரு கட்டடம் திறக்கப்பட்டிருக்கிறது. அங்கே அவர்களுக்கு மின் விசிறியுடன் படுக்கை வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. நானும் RMO மீனாட்சியும்தான் உறவினர்களுக்காக இந்த வசதிகளைப் பார்த்து பார்த்து ஏற்பாடு செய்தோம். நாங்களும் இந்தக் கட்டடம் சம்பந்தமாக எங்களின் ஊழியர்களின் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆனால், நாங்கள் எவ்வளவு சொன்னாலும் மக்கள் முழுமையாக அந்தக் கட்டடத்தில் வந்து தங்குவது இல்லை'' என்றார். "வசதியான இடமிருந்தும் மக்கள் வெளியில் தங்குகின்றனர் எனில், அதில் என்ன சிக்கல் இருக்கிறது?, போதிய விழிப்புணர் ஏன் இல்லை?' என்பன குறித்து மருத்துவமனை நிர்வாகம் யோசிக்க வேண்டுமல்லவா? மருத்துவமனையின் சிகிச்சைகள் குறித்து பல இடங்களிலும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதேமாதிரி, இந்தத் தங்குமிடம் குறித்து எந்த இடத்திலும் மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் பதாகைகள் இல்லையே?" என்று கேட்டோம். ஜூலை திறக்கப்பட்ட கட்டடம்ஜூலை திறக்கப்பட்ட கட்டடம்ஜூலை திறக்கப்பட்ட கட்டடம் அதற்கு பதிலளித்த மருத்துவமனையின் இயக்குநர், "இரண்டு நாள்களுக்கு முன்பு கூட ஊழியர்களை வைத்து ஒலிப்பெருக்கி மூலம் தங்குமிடம் குறித்து தெரியப்படுத்தினோம். ஆனாலும் மக்கள் குறைந்தளவில்தான் வருகின்றனர். நீங்கள் சொல்வதைப் போல அங்கிருக்கும் கட்டடத்தையும் வசதிகளையும் புகைப்படம் எடுத்து பதாகையாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கிறோம்" என்றார். 'உட்கார கூட இடமில்ல.' - முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/there-is-a-building-for-patients-to-stay-but-egmore-hospital-responds-to-vikatan-report




