சென்னை, அரசு ஆஸ்பத்திரி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளையம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 40). இவர் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அவசர பிரிவில் தனது பணியை முடித்துவிட்டு ராஜேஸ்வரி இரவு சுமார் 7.30 மணியளவில் வீட்டுக்கு புறப்பட்டார். ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை ராஜேஸ்வரியின் மீது ஊற்றினார். தீவிர சிகிச்சை இதனால் அதிர்ந்துபோன ராஜேஸ்வரி உயிர் பிழைக்க அலறியடித்துக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவிற்குள்ளேயே தலைதெறிக்க ஓடினார். விரட்டி சென்ற அந்த நபர் ராஜேஸ்வரியின் மீது தீயை பற்ற வைத்தார். இதில் அவரது உடல் முழுவதிலும் தீ மளமள வென்று பரவியது. ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் போராடி தீயை அணைத்தனர். இதற்கிடையே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். தீ விபத்தில் ராஜேஸ்வரியின் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக முதல் உதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த பொன்னேரி போலீசார் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வந்தனர். துப்பாக்கி சூடு இந்த நிலையில், பெண் ஊழியருக்கு தீ வைத்த பிரகாஷ் என்பவர் பொன்னேரி சுடுகாட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறைந்திருந்த பிரகாஷை பிடிக்க முயன்றபோது எஸ்.ஐ.தமிழரசனை அரிவாளால் வெட்டி வெட்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது சுதாரித்துக்கொண்ட ஆய்வாளர் சிவக்குமார் தற்காப்புக்காக துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டார். இதில் காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த, பிரகாஷை போலீசார் மீட்டு திருவள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாள் வெட்டில் காயமடைந்த எஸ்.ஐ.-க்கு அதே மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/police-shot-and-apprehended-the-man-who-poured-petrol-on-a-female-employee-and-set-her-on-fire




