பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் முழுவதும் உள்ள 26, 3 நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கொண்ட 30 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அதிரடியாக தங்களது சோதனைகளை தொடங்கினர். காலாவதியான உணவு பொருட்கள் அப்போது இந்த சோத னையில் பல்வேறு ஓட்டல்க ளில் பல்வேறு விதமான விதிமீறல்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் சுகாதாரமற்ற சமையல் அறைகள் மற்றும் சேமிப்பு அறைகள், காலாவதியான உணவு பொருட்கள், காய்கறி களில் பூஞ்சை வளர்ச்சி, முறையற்ற உணவு கையா ளும் நடைமுறைகள், தவ றான முத்திரை யிடப்பட்ட உணவு பொருட்களின் இருப்பு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் குறியீட்டு விதிமுறைகளுக்கு எதிராகவும் மற்றும் சைவ மற்றும் அசைவ உணவு பொருட்களுக்கு தனித்தனி சேமிப்பு வசதிகளை பராம ரிக்க தவறியது போன்றவை கண்டு பிடிக்கப்பட்டது. 5 நட்சத்திர ஓட்டல் குறிப்பாக பெங்களுருவில் உள்ள ஒரு பிரபல 5 நட்சத்திர ஓட்டலில் இருந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 76 கிலோ இறைச்சி, அழுகி போன 200 கிலோ காய்கறிகள் மற்றும் 32 லிட்டர் காலாவதியான பாலை பறிமுதல் செய்து அழித்தனர்.மேலும் மற்றொரு ஓட்டலில் 15 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஓட்டல்களில் இருந்து இறைச்சிகள், பேக்கரி பொருட்கள், காலாவதியான 105 கிலோ உணவு பொருட்ள் மற்றும் மீன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மேலும் விதி மீறல்கள் கண்டறியப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சோதனைக்கு அனுப்பி வைப்பு தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு கெட்டுப்போன இறைச்சி மற்றும் காய்கறிகள், காலாவதியான பால் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சோத னைக்கு அனுப்பி உள்ளனர்.பெங்களூரு நகரின் மிகவும் பிரபலமான ஓட்டல்களில் இந்த காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உணவு பாது காப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனைத்து உணவு வணிக நிறுவனங்களும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடை பிடிக்கவும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விதிமுறைகளுக்கு உட்பட்டு உணவு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்டும் என்றும் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். இது குறித்து கர்நாடக சுகாதார அமைச்சர் யு.டி.காதர் கூறும் போது, உயர்தர ஓட்டல்கள் கூட உணவு பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்யவே இந்த சோதனை நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/rotten-vegetables-and-expired-milk-found-at-5-star-hotel-officials-shocked-during-inspection




