தந்தை - மகன் மோதல், பழிவாங்கும் படலம் என்றாலும் புதுமையான காட்சிகள் மற்றும் அதிரடி நிறைந்த திரைக்கதையால் ‘மகுடம்’ படத்தை இயக்கி, நடிப்பு தாண்டி இயக்கத்திலும் கவனம் ஈர்த்துள்ளார் விஷால். மருந்து விற்பனை பிரதிநிதியான (மெடிக்கல் ரெப்) விஷால், தனது மனைவி துஷாரா விஜயன் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். கார் வாங்குவது என்ற தனது குடும்பத்தின் நீண்ட கால கனவை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார். ஒரு வழியாக கஷ்டப்பட்டு பணம் சேர்த்து பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்குகிறார். அந்த காரில் தனது குடும்பத்துடன் ஒரு சுற்றுலா பயணமும் செல்கிறார். அப்போது அவரது காரை வழிமறிக்கும் மர்ம கும்பல் ஒன்று காரில் இருக்கும் துஷாரா விஜயனையும், சிறுமியையும் சுட்டுக் கொல்கிறார்கள். தனது மகனுடன் காட்டுக்குள் ஓடி தப்பிக்கும் விஷால் ஒரு கட்டத்தில் எதிரிகளை பந்தாட தொடங்குகிறார். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று தனது மகன் கேட்க லிங்கா என்று தனது தந்தை பெயரை பதிலாக கொடுக்கிறார் விஷால். விஷாலின் இந்த நிலைக்கு காரணம் என்ன? லிங்கா யார்? இதன் பின்னணி என்ன? என்பதை பரபரப்பான மீதி கதை. தந்தை மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் கலக்கி இருக்கிறார் விஷால். தந்தையாக மிகப்பெரிய டான் கதாபாத்திரத்தில் அதிரடி காட்டும் விஷால், மகன் கதாபாத்திரத்தில் சாதுவாக அனுதாபம் அள்ளுகிறார். ஆக்சன் அதிரடி காட்சிகளில் அதகளம் புரிந்திருக்கிறார். துஷாரா விஜயனின் கலக்கலான நடிப்பு கை கொடுத்திருக்கிறது. பிளாஷ் பேக்கில் அஞ்சலி ஸ்கோர் செய்துள்ளார். ஜான் விஜய் கவனம் ஈர்க்கும் நடிப்பை வழங்கி இருக்கிறார். யோகி பாபு, ஜாவா சுந்தரேசன் உட்பட இதர நடிகர் நடிகைகளும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் மற்றும் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் காட்சிகள் மிரட்டல். ஜிவி பிரகாஷ் இசை படத்துடன் ஒன்று செய்கிறது. பாடல்களும் கலக்கல். மிரட்டலான அதிரடி காட்சிகள் படத்துக்கு பலம். பல காட்சிகளை யூகிக்க முடிகிறது. தந்தை - மகன் மோதல், பழிவாங்கும் படலம் என்றாலும் புதுமையான காட்சிகள் மற்றும் அதிரடி நிறைந்த திரைக்கதையால் படத்தை இயக்கி, நடிப்பு தாண்டி இயக்கத்திலும் கவனம் ஈர்க்கிறார் விஷால். கிளைமேக்ஸ் காட்சி திருப்பம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/movie-review/did-vishal-win-as-a-director-magudam-cinema-review




