பெங்களூரு, நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படத்தின் டிரெய்லரில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து கன்னட நடிகை ரிஷிகா சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெண்களை இப்படி காட்டுவதா? இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ரிஷிகா சிங், “கன்னட சினிமா உலகளவில் வளர வேண்டும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், ‘டாக்சிக்’ டிரெய்லரில் பெண்களை சித்தரித்துள்ள விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. படத்தில் 5 முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். அவர்களில் யாரையாவது கண்ணியமாகவோ, அழகாகவோ காட்டியுள்ளார்களா? பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை அழைத்து வந்து இப்படித்தான் காட்டுவதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். யாஷுக்கு எச்சரிக்கை மேலும், “ஒரு குடும்பத் தலைவனாகவும், தந்தையாகவும் இருக்கும் யாஷ், பெண்களை மதிக்கும் விதத்தில் கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்றால், உங்களை கர்நாடகாவை விட்டு வெளியேற செய்வோம்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 26-ம் தேதி வெளியாகிறது ‘கேஜிஎப்: சாப்டர் 2’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு, நீண்ட இடைவெளிக்கு பின்னர் யாஷ் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ‘டாக்சிக்’. இந்த அதிரடி ஆக்சன் திரைப்படம், வருகிற 26-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/cinemanews/we-will-make-him-leave-karnataka-actress-issues-warning-to-yash




