சென்னை, திமுக-வின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்கில்கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்திருப்பதாவது:- மதுராந்தகம் தொகுதி மக்களின் மாபெரும் எழுச்சிக்கு நடுவே இடைத்தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார் வெற்றித் தலைவர் அவர்கள். 'மதச்சார்பின்மை, சமூகநீதி, ஊழலில்லாத நிர்வாகம், பெண்கள் பாதுகாப்பு' ஆகிய கொள்கைகளில் எந்த சமரசமும் இல்லாமல், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக சமூகநீதி நலனுக்குத் தேவையான சாதிவாரி சர்வே கணக்கெடுப்பை எடுக்காமல் கடமை தவறியது திமுக. ஆனால், தவெக அரசு பொறுப்பேற்றவுடன் மிகவும் பின்தங்கிய மக்கள், விளிம்புநிலை மக்கள் உட்பட அனைவரின் சமூகநீதி நலனுக்கு அடித்தளமான சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளோம். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாததால், ஆபாச பேச்சுகள், தமிழக மக்கள் மீது இழிவான வசைபாடல்கள், அவதூறு தாக்குதல்கள் ஆகியவற்றை ஒரே வேலையாகச் செய்துவருகிறது திமுக. அத்தகைய திமுக-வின் கடந்த ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ வழக்கில்கூட நடவடிக்கை எடுக்காமல் உண்மையை மூடி மறைத்துள்ளார்கள். இவ்வாறு அவர்கள் செய்த அனைத்து மக்கள் விரோத அரசியலும் அம்பலப்பட்டு நிற்கிறது. குற்றம் செய்தவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். ஊழல், முறைகேடுகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. 'மக்கள் நலனே முதன்மை' என்று சொல்லும் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில், 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின்' வேட்பாளர்கள் இருவரும் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று அடையப்போகும் வெற்றி இதனை மீண்டும் நிரூபிக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/no-action-taken-even-in-pocso-cases-during-dmk-rule-aadhav-arjuna-alleges




