சென்னை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர். திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அங்கு அவருடைய மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். கடற்கரை போலீஸ்காரர் இந்த நிலையில் சென்னையில் வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருப்பூரில் திருட்டுபோன அவரது மோட்டார் சைக்கிள் சிக்கியது. இதைத்தொடர்ந்து புகார் அளித்திருந்த வாலிபரை வடக்கு கடற்கரை போலீஸ்காரர் விவேக் தொடர்புகொண்டு சென்னையில் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்ட தகவலை தெரிவித்தார். அதன்பேரில் தனது மோட்டார் சைக்கிளை பெற்று செல்வதற்காக திருப்பூரில் இருந்து சென்னை வந்த அவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ். போலீஸ்காரர் விவேக் ஆகியோர் 'ஜி-பே' மூலம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை இதுகுறித்து அவர், சென்னை போலீஸ் துறையில் பிரத்யேகமாக செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறையின் உள் கண்காணிப்பு பிரிவு எண்ணில் (78717- 23000) புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் 'ஜி-பே' மூலம் லஞ்சம் பெற்றதால் வசமாக சிக்கினார்கள். இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், போலீஸ்காரர் விவேக் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/bribery-through-g-pay-2-people-including-a-police-sub-inspector-suspended-in-chennai




