கோதாவரி, பணம் கேட்டு தொல்லை செய்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கறிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்காதல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிமேடு பகுதியை சேர்ந்தவர் கல்யாணி. இவர் மங்களகிரி பகுதியில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கவுஸ் முகைதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதன் மூலமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. பின்னர், கவுஸ் முகைதீன் கருத்து வேறுபாடு காரணமாக கல்யாணியுடனான உறவை துண்டித்துள்ளார். இதையடுத்து கவுஸ் முகைதீன் கள்ளக்காதல் மூலம் பிறந்த ஆண் குழந்தையை தனது உறவினரான பவானிப்புரத்தை சேர்ந்த ஷபி என்பவரிடம் கொடுக்க முன் வந்தார். ஷபிக்கு திருமணம் ஆன நிலையில் அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. ஆண் வாரிசு இல்லாததால் அந்த குழந்தையை ஷபி தத்தெடுத்து வளர்த்து வந்தார். குழந்தையை பார்ப்பதற்காக கல்யாணி வீட்டிற்கு அடிக்கடி வந்தார். பெண் வெட்டிக்கொலை பின்னர், கல்யாணிக்கும் ஷபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கல்யாணி ஷபியிடம் பணம் கேட்டு தொல்லை அளித்துள்ளார். ஷபியும் தொடர்ந்து பணம் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் பணம் இல்லாத போது ரூ. 20 ஆயிரம் பணம் உடனே வேண்டும் என கேட்டு தொல்லைக் கொடுத்துள்ளார். பணம் தரவில்லை என்றால் தனது ஆண் குழந்தையை தருமாறு கல்யாணி கேட்டார். 10 ஆண்டுகளாக வளர்த்து வந்த குழந்தையை ஷபி கொடுக்க மறுத்து கல்யாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷபி கல்யாணியை கொலை செய்ய திட்டம் தீட்டினார். பணம் தருவதாக கூறி கல்யாணியை கறிகடைக்கு வரவைத்த ஷபி கடையில் பணி புரியும் குரவையாவுடன் இணைந்து கல்யாணியை அரிவாளால் வெட்டிக் கொன்றார். இதையடுத்து உடலை 10 துண்டுகளாக வெட்டி அருகிலுள்ள கால்வாயில் வீசி விட்டு சென்றார். விசாரணை இதையடுத்து அந்த வழியே சென்ற பொதுமக்கள் கால்வாயில் உடல் பாகங்கள் கிடப்பதை பார்த்து இப்ராகிம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். போலீசாருக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இதற்கிடையே உடலில் இருந்த ஆடைகள் மற்றும் கையில் இருந்த டாட்டூவை போலீசார் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர். இதனை பார்த்த கல்யாணியின் சகோதரர் கொலை செய்யப்பட்டது தனது சகோதரி தான் என போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன் மூலம் போலீசார் நடத்திய விசாரணையில் கல்யாணி தனது குழந்தையை கேட்டும் பணம் கேட்டும் ஷபியை மிரட்டிய ஆத்திரத்தில் கொலை செய்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் ஷபியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/shocking-backstory-butcher-kills-woman-over-cash




