காந்தி நகர், குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த புதன்கிழமை முதல் அம்மாநிலத்தின் சூரத், வல்சாத், நவ்சாரி ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. மீட்புப்பணியில் ராணுவம் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளத்தால் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேவேளை, கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/gujarat-highway-shut-as-rain-triggers-flooding-army-joins-rescue-ops




