சென்னை, செல்லப்பிராணிகளை கைவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாமன்ற கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று (25.09.2026) ரிப்பன் கட்டிட மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மைக்ரோ சிப், ஸ்கேனர்கள் இந்நிலையில் சென்னையில் செல்லப்பிராணிகளான நாய், பூனை உள்ளிட்டவற்றை கைவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொது இடங்களில் கைவிடப்படும் செல்லப்பிராணிகளை பிடித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செல்லப்பிராணிகளுக்கு பொருத்தப்பட்ட மைக்ரோ சிப், ஸ்கேனர்கள் மூலம் ஸ்கேன் செய்து அதன் உரிமையாளர்களை கண்டறிந்து ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ரூ.10 ஆயிரம் ஆரம்பத்தில் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்க திட்டமிடப்பட்ட நிலையில் அபராத தொகை குறைக்க நிலைக் குழுவின் பரிந்துரையை தொடர்ந்து ரூ.10 ஆயிரமாக நிர்ணயித்து மன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் POS இயந்திரங்களை பயன்படுத்தி இந்த அபராதத் தொகையை நேரடியாக வசூலிக்கவும் தீர்மானத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/rs-10000-fine-for-abandoning-pets-such-as-dogs-and-cats-chennai-corporation




