உலக அளவில் பாலிசிலிகான் சந்தையில் சீனாவிற்கு என்று தனி இடம் உண்டு. செமி கண்டக்டர்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்பில் பாலிசிலிகான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு செக் வைப்பது போல, அமெரிக்கா புதிய நடைமுறை ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. புதிய நடைமுறையின் படி, பாலிசிலிகானில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்களுக்கு 15 சதவிகித வரியையும், குறைந்தபட்ச இறக்குமதி விலையும் நிர்ணயித்துள்ளது அமெரிக்க அரசு. பாலிசிலிகான்அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்? ஏன் இந்த நடைமுறை? நாட்டின் செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தூய்மை ஆற்றல் தொழில்துறைகளுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருள்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் புதிய நடைமுறை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய வரியும், விலையும் வருகிற டிசம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது செமி கண்டக்டர்கள், ஏ.ஐ, சோலார் போன்றவை உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்த நேரத்தில் அவற்றிற்குத் தேவையான மூலப்பொருளுக்கு வெளிநாடுகளைச் சார்ந்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, இதன் உற்பத்தியை அமெரிக்காவிலேயே அதிகரிக்க வேண்டும். அப்படி நடந்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதே அமெரிக்க அரசின் ஐடியா. பாலிசிலிகான் என்றால் என்ன? பாலிசிலிகான் என்பது மிகவும் தூய்மையான சிலிகான் வடிவம் ஆகும். இது செமிகண்டக்டர் மற்றும் சோலார் உற்பத்தி ஆகிய இரண்டின் விநியோகச் சங்கிலியிலும் மிக ஆரம்பகட்ட மூலப்பொருளாக விளங்குகிறது. இது கணினி சிப்புகள் மற்றும் சோலார் செல்களைத் தயாரிக்கப் பயன்படும் 'வேஃபர்களாக' (wafers) மாற்றப்பட்டு, பின்னர் சோலார் பேனல்களாகப் பொருத்தப்படுகின்றன. அமெரிக்கா - சீனா'கடைகளில் UPI பயன்படுத்தி பணம் செலுத்துகிறீர்களா?' - அதற்கு இனி மத்திய அரசு கட்டணம் வசூலிக்கலாம் சீனாவிற்கு என்ன நெருக்கடி? தற்போது உலக அளவில் பாலிசிலிகான் உற்பத்தியில் சீனா தான் டாப்பில் உள்ளது. அமெரிக்காவிற்கும் பாலிசிலிகானைக் கணிசமான அளவில் ஏற்றுமதி செய்கிறது சீனா. உலக நாடுகளுக்குச் செல்லும் 12 சதவிகித செமி கண்டக்டர் சிப்கள் அமெரிக்காவில் இருந்து தான் சப்ளை ஆகின்றன. இந்த உற்பத்திக்குப் பாலிசிலிகான் நிச்சயம் தேவை. அதிக விலை, வரி கொடுத்து ஒரு பொருளை இறக்குமதி செய்வதை விட, தாங்களே உற்பத்தி செய்துகொள்ளலாம் என்கிற எண்ணம் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடும். இதனால், அமெரிக்கா விதித்துள்ள வரியும், விலையும் சீனாவிற்கு நெருக்கடியாக அமையும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/us-imposes-new-tariffs-on-polysilicon-to-boost-domestic-supply




