சென்னை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக தடகள வீரர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- நல்வாழ்த்து ஜப்பான் நாட்டில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தடகளம் ஆண்கள் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்ட போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீரர்கள் விஷால் மற்றும் ராஜேஷ் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கை இத்தடகள வீரர்களின் சாதனையை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களது விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும், குழு ஒருங்கிணைப்பும் வெற்றியை நோக்கி பயணிக்கும் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கும். எதிர்காலத்திலும் இத்தடகள வீரர்கள் பல வெற்றிகளை பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/asian-games-tamil-nadu-athletes-bronze-medal-cm-vijay-congratulates




