புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் வழங்கப்பட்ட நினைவு பரிசுகளின் 8-வது பதிப்பு மின்னணு ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இணையதளம் வாயிலாக நடைபெறும் இந்த ஏலம் வருகிற அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 31 முக்கிய தமிழக பொருட்கள் இந்த ஏலத்தொகுப்பில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலை பொருட்கள் இடம்பெற்றுள்ள போதிலும், தமிழ்நாட்டின் பன்முக கலாச்சார பாரம்பரியம் மற்றும் விளையாட்டு சாதனைகளை பிரதிபலிக்கும் 31 அதிமுக்கிய பொருட்களுக்கு ஏலத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பாராளுமன்ற வீரர்களின் மட்டைகள், ஷூக்கள் விளையாட்டு பிரியர்களை கவரும் வகையில், கடந்த 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை நித்யா ஸ்ரீ சிவனின் பேட்மிண்டன் மட்டை மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனின் கையொப்பமிட்ட பேட்மிண்டன் மட்டை ஆகியவை ஏலப் பட்டியலில் முன்னணியில் உள்ளன. பேட்மிண்டன் மட்டை,மாரியப்பன் தங்கவேலுவின் காலணிகள் மாரியப்பன் தங்கவேலுவின் காலணிகள் இதுதவிர, உயரம் தாண்டுதலில் மூன்று முறை பாராலிம்பிக் பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் காலணிகளும் (ஷூ) இந்த ஏலத்தொகுப்பில் இடம்பெற்று, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆன்மீக பொருட்கள் தமிழகத்தின் ஆன்மீக மரபை பறைசாற்றும் வகையில், கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை நினைவகத்தால் வழங்கப்பட்ட, பகவதி அம்மனின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளதாக நம்பப்படும் மங்களகரமான 'ஸ்ரீ பாதப்பாறை' நினைவு பரிசு ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாதச்சுவடுகள்,வீணை மேலும், ஆன்மீக சிந்தனையாளர் ஸ்ரீ ராமானுஜராச்சாரியாரின் திருவுருவ சிலை, கைவினைஞர்களால் நுணுக்கமாக உருவாக்கப்பட்ட திருவள்ளுவர் தேர் மாதிரி, சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தை காட்சிப்படுத்தும் உலோகத்தாலான நடராஜர் சிலை ஆகியவையும் ஏலத்திற்கு வந்துள்ளன. தஞ்சாவூர் வீணை, ஓவியங்கள் கலைஞர்களை கவரும் வண்ணம், தங்க தகடு மற்றும் குந்தன் கற்களால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சாவூர் பாணி வீணை கலைப்படைப்பு, முருகப்பெருமானின் தஞ்சாவூர் ஓவியம் மற்றும் தங்க தகடு வடிவமைப்பு, ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாளின் பக்தி சித்திரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை குறிக்கும் பித்தளை நினைவு பரிசு மற்றும் ஜரிகை நெசவு அலங்காரங்களுடன் கூடிய தென்னிந்திய அங்கவஸ்திரங்கள் ஆகியவையும் இந்த ஏலத்தில் வைக்கப்பட்டு தமிழகத்தின் கைவினைத் திறனை உலகிற்கு பறைசாற்றி வருகின்றன. பங்கேற்பது எப்படி? இந்த அரிய நினைவு பரிசுகளின் ஏலத்தில் பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஏலம் எடுக்கலாம். இதற்கான கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளவும், ஏலத்தில் நேரடியாக பங்கேற்கவும் [ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/prime-ministers-gifts-auction-tamil-nadu-culture-sports




