சேலம், கரூர் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவை மாற்றப்பட்டு உள்ளது. பராமரிப்பு பணி ஈரோடு-கரூர் வழித்தடத்தில் ரெயில்வே பாலங்களின் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை மறுநாள் (சனிக்கி ழமை) ஈரோடு-செங்கோட்டை உள்பட சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதாவது, திருச்சியில் காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டிய திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (வண்டி எண்-56809) நாளை மறுநாள் கரூர் ரெயில் நிலையத்துடன் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக கரூரில் இருந்து ஈரோடு வரை அந்த ரெயில் இயக்கப்படாது. கரூர் வரை. இதேபோல், ஈரோட்டில் இருந்து நாளை மறுநாள் மதியம் 2 மணிக்கு புறப்பட வேண்டிய ஈரோடு-செங்கோட்டை ரெயில் (16845) கரூரில் இருந்து மதி யம் 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் ஈரோடு சந்திப்பில் இருந்து கரூர் சந்திப்பு வரை இயக்கப்படாது. அதேபோல், மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தினமும் காலை 5.20 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை-ஈரோடு ரெயில் (16846) கரூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோட்டிற்கு இயக்கப்படாது என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-the-erode-sengottai-train-service




