சென்னை, தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயரை மாற்றி த.வெ.க. அரசு அறிவித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டம்மி ஆட்சியாளர்கள் இதுதொடர்பாக அவர் பேசியதாவது:- தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மின்வெட்டு ஏற்படுகிறது. டம்மி ஆட்சியாளர்களால் மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். திமுகவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்புகின்றனர். வெற்றி, தோல்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, என்றுமே மக்களோடு நிற்கின்ற இயக்கம் தி.மு.க. த.வெ.க. அரசு த.வெ.க. ஆட்சியில் விலைவாசியும் அவற்றின் பற்றாக்குறையும் ஏறிக்கொண்டே இருக்கின்றன. பல்வேறு வாக்குறுதிகளைச் சொல்லி ஆட்சிக்கு வந்தனர். ஆனால் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தி.மு.க. அரசு கொண்டுவந்த திட்டங்களின் பெயரை மாற்றி த.வெ.க. அரசு அறிவித்து வருகிறது தி.மு.க.வின் வெற்றி திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி த.வெ.க. கொண்டு வந்தது போன்று பொய்யைப் பரப்புகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம். த.வெ.க. ஆட்சியின் வீழ்ச்சிக்கு இரு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி தொடக்கமாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/power-cuts-everywhere-in-tamil-nadu-udhayanidhi-stalins-allegation




