திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் அடிவார பகுதியில் கோயிலுக்கு சொந்தமாக 100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலம் 1888 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமி திருமடத்திற்கு பராமரிப்பு மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிலைத்தை விற்பனை செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் கோயில் கட்டளைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், காலப்போக்கில் இந்த நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்தனர். இது தொடர்பாக, பழநி தேவஸ்தானம் சார்பில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள், தண்டபாணி சுவாமி மடத்துக்கு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இணை ஆணையரை தக்காராக நியமித்ததுடன் இந்த நிலத்தை தேவஸ்தானத்துடன் இணைத்தும் உத்தரவிட்டன. பார்க்கிங்காக மாற்றப்பட்டுள்ள கோயில் நிலம் இதையடுத்து, தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம், தக்கார் மற்றும் பழநி கோயில் இணை ஆணையரான மாரிமுத்து தலைமையில் 60 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2025 செப்.12-ம் தேதி மீட்கப்பட்டு பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிறுத்தமாக, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பழநி இணை சார் பதிவாளர் மூலம் 6-ம் தேதி தண்டயுதபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து 100 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு வெள்ளைதுரை, சேதுபதி ஆகியோர் பெயரில் முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டது. இந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி, பதிவுத்துறை தலைவருக்கு பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறிக்கை அனுப்பினார். பழனி திருக்கோயில் இந்நிலையில் மோசடியாக பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலரான ஜஸ்டின் மணிகண்டன், ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார்பதிவாளராக பணியாற்றி இந்த பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/sub-registrar-suspended-in-case-involving-the-fraudulent-registration-of-palani-temple-properties




