திருச்சி, தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருச்சி வழியாக சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற மாவட்டங்க ளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்க ளுக்கும் திருச்சி வழியாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சியை சுற்றியுள்ள தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளுக்கு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் திருச்சி வழியாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் ரெயிலில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. திருச்செந்தூருக்கு ஒரு ரெயில் மட் டுமே இயக்கப்படுகிறது. எனவே திருச்சி வழியாக திருச்செந்தூருக்கு செல்ல மேலும் சிறப்பு ரெயில்கள், வாரந்திர ரெயில்கள் மற்றும் கூடுதலாக தினசரி ரெயில்கள் இயக்க பக்தர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/passengers-request-additional-trains-to-tiruchendur-via-trichy




