மும்பை பேலாப்பூர் பகுதியில் உள்ள பார்சிக் மலையில் சின்மயி பாட்டீல் என்ற 17 வயது சிறுவன் கார் ஓட்டிக்கொண்டிருந்தார். கார் மலையில் குறுகலான பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகியது. இதனால் மலைப்பாதையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கார் விழுந்தது. மலையில் 70 அடி பள்ளத்தில் ரயில் தண்டவாளம் இருக்கிறது. கார் அந்த ரயில் தண்டவாளத்தில் விழுந்தது. காரில் இருந்த ஏர் பேக் விரிவடைந்து பாட்டீல் பின் இருக்கையில் தூக்கி வீசப்பட்டார். கார் தண்டவாளத்தில் விழுந்ததால் பாட்டீலுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாட்டீல் சான்பாடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அவர் கல்லூரிக்கு செல்லாமல் தனது நண்பரிடம் காரை வாங்கிக்கொண்டு பார்சிக் மலையை சுற்றிப்பார்க்க சென்ற போது இச்சம்பவம் நடந்தது. இது குறித்து போலீஸ் அதிகாரி ரஷ்கர் கூறுகையில், ''மைனர் சிறுவன் காரை மலை உச்சியில் நிறுத்தி இருந்தார். திரும்ப வர காரை எடுத்தபோது பிரேக் பிடிப்பதற்கு பதில் ஆக்சிலேட்டரை மிதித்துவிட்டான். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் விழுந்தது'' என்று தெரிவித்தார். ரயில்வே ஊழியர்களும் அப்பகுதி மக்களும் சேர்ந்து காரை தண்டவாளத்தில் இருந்து வெளியில் தள்ளிச் சென்றனர். இச்சம்பவத்தால் அந்த வழியாக வந்த ரயில் ஒன்று சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த வழித்தடத்தில் அதிக ரயில்கள் வராது என்பதால் பெரிய அளவில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸாரின் விசாரணையில் அந்த மைனர் ஓட்டிய கார் பாட்டீலுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. பாட்டீல் தனது நண்பர் ஒருவரின் ஆதார் கார்டை பயன்படுத்தி காரை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. பாட்டீல் கார் வாங்கியது அவரது பெற்றோருக்கும் தெரியும் என்று போலீஸார் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/crime/accidents/accident-in-mumbai-car-driven-by-a-minor-plunges-70-feet-from-a-hill-onto-railway-tracks




