சென்னை, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கத் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நல சங்கம் நேரடி தொழிற்பயிற்சிகளையும், ஆன்லைன் பயிற்சிகளையும் மகளிர் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் சேவை மனப்பான்மையுடன் கடந்த 18 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. அதன்படி, மாதம்தோறும் 2-வது சனிக்கிழமையும், 4-வது சனிக்கிழமையும் ஆன்லைன் கருத்தரங்கம் மற்றும் பயிற்சி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் பயிற்சி அந்த வகையில் 25-ந் தேதி (நாளை) சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் ஆலுவேரா ஜெல் (கற்றாழை) தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த தொழில் பயிற்சியில் கலந்து கொள்ளும் பெண்கள் கட்டணம் இன்றி உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். இதில் கலந்து கொள்ள எந்த கட்டண மும் கிடையாது. zoom.wewatn.com என்ற இணைப்பின் வழியாக இணைந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/training-on-making-aloe-vera-gel-by-the-women-entrepreneurs-association




