திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பு முருகானந்தம் தஞ்சாவூரில் வசித்து வருகிறார். தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். டெல்டா பா.ஜ.க-வின் முகமாக இருந்தவர். கடந்த சட்டமன்றத் தேர்தல் உட்பட பல தேர்தல்களில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகச் சில தினங்களுக்கு முன்பு கருப்பு முருகானந்தம் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். திருச்சியில் வசித்த பா.ஜ.க பெண் நிர்வாகியான திவ்யா சேஷாத்ரி, தலைமையிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகச் சொல்லப்பட்டது. முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலத்தில் பேசும் கருப்பு முருகானந்தம் இந்த விவகாரம் சலசலப்பைக் கிளப்பிய நிலையில் இது முழுக்க பொய்யான குற்றச்சாட்டு, அந்தப் போட்டோ AIல் உருவாக்கப்பட்டவை எனக் கருப்பு முருகானந்தம் தெரிவித்திருந்தார். இதையடுத்து திவ்யா சேஷாத்ரியும் அவர் வகித்த பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில், 34வது விநாயகர் ஊர்வலம் நடந்தது. இதில் கலந்துக்கொண்ட பா.ஜ.க-வின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசியது சமூக ஊடகலிங்களில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, "அரசியலில் சூழ்ச்சிகள் இருக்கத்தான் செய்யும். யார் நம் உடன் இருக்கிறார்களோ அவர்களே சூழ்ச்சி செய்வார்கள். என்னை கொலை செய்ய வேண்டும் எனப் பயங்கரவாதிகள், போலீசார் கூட திட்டமிட்டனர். இவற்றையெல்லாம் சந்தித்துதான் நான் வந்திருக்கிறேன். நான் என்றைக்கும் கட்சிக்காகவும், கொள்கைக்காகவும் வாழக்கூடியவன். கட்சி பொறுப்பு எனக்கு ஒரு பொருட்டல்ல. கட்சி பொறுப்பு என் முடிக்கு சமம். என்னை பொறுப்பை விட்டு எடுத்து விட்டால், இவன் அழிந்துவிட்டான், இனிமேல் நாம்தான் என நினைக்கிறார்கள். பயங்கராவதிகள், கட்சிகாரர்கள், காவல்துறையினர் என யாராலும் என்னை அழிக்க முடியாது, அசைத்துப் பார்க்க முடியாது. என் உயிர் இருக்கும் வரை நான் களத்தில் இருந்து கொண்டே இருப்பேன். யார் சதி செய்தாலும் அச்சப்படுபவன் நான் அல்ல. எல்லாத்தையும் பார்த்துட்டுதான் வந்திருக்கிறேன். வருட கணக்கா நான் இந்த இயக்கத்துக்காக ஜெயிலில் இருந்திருக்கிறேன். பல முறை எனக்கு கொலை முயற்சி நடந்திருக்கு. காவல்துறையும் முயற்சி செய்துள்ளனர் இதை நான் திரும்பத் திரும்ப சொல்றேன். கருப்பு முருகானந்தம் எல்லாத்தையும் தாண்டிதான் இங்கு வந்திருக்கேன். நான் நேற்று கட்சிக்கு வரவில்லை. என் உயிரைப் பணயம் வைத்து கட்சிக்கு வேலை செய்திருக்கேன். என் குடும்பத்தை, பிள்ளைகளை விட்டுட்டு கட்சிக்காகச் சுத்தியிருக்கேன். கட்சி எடுக்கும் நடவடிக்கை கட்டுப்படுறேன். என்னை போலீசார் என்கவுண்டர் செய்ய முடிவெத்தபோது வீட்டில், என் மனைவி, பிள்ளைகளோடு இருந்தேன். போலீஸார், வீட்டில் கதவை உடைத்து என்னை அழைத்துச் சென்றனர். அன்றைக்கும் உங்களுடன் நான் இருக்கேன் என என் மனைவி சொன்னார். இன்றைக்கு என் மீது குற்றச்சாட்டு வந்தபோதும் என் மனைவி, பிள்ளைகள் என்னோடு இருக்கின்றனர். அது எனக்கு போதும். என்னை ஏற்றுக்கொண்டவர்கள் எனக்காக எதையும் செய்யக்கூடியவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். என்னை ஒழிந்து விட்டதாக யாரும் நினைக்க வேண்டாம். அப்படி நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அடுத்தது நான்தான் என நினைப்பவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஆகி விடுவார்கள். யாருக்கும் எதற்கும் கவலைபடாமல் என்னுடைய இயக்கப் பணியை நான் தொடர்ந்து கொண்டே இருப்பேன்" என்றார். கருப்பு முருகானந்தம் பதவி பறிப்பு: சித்ரவதை, மிரட்டல். பகீர் கிளப்பிய பெண் நிர்வாகி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/bjps-karuppu-muruganandam-about-recent-allegation




