தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு, 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கலங்கரையான் மகன் முத்தையா (வயது 63) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று, முத்தையாவை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/elderly-man-gets-20-years-in-prison-for-sexually-harassing-11-year-old-girl




