சென்னை, சென்னையில் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்க்கும் ஜி.வி.பிரகாஷ் வாடகைக்கு வீடு தேடி அலைகிறார். அப்போது ஒரு சொகுசான அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும் கயாடு லோகர் 'ரூ.5 ஆயிரம் கொடுத்தால் என்னுடன் அறையை ஷேர் செய்யலாம்' என்று அழைப்பு விடுக்கிறார். கயாடு லோகரின் அழகில் மயங்கும் ஜி.வி.பிரகாஷ், அந்த சொகுசு குடியிருப்பில் தங்குகிறார். அவரை காதலிக்கவும் தொடங்குகிறார். இதற்கிடை யில் கயாடு லோகரின் நடவடிக்கையில் மாற்றங்கள் இருப்பதை ஜி.வி.பிரகாஷ் உணர்கிறார். அவரை கண்காணிக்க தொடங்குகிறார். கயாடு லோகர் சாதாரண பெண் அல்ல, ரத்தம் குடிக்கும் ராட்சசி என்று தெரியவர ஜி.வி.பிரகாஷ் அதிர்ச்சியில் உறைகிறார். அந்த அறையில் இருந்து தப்பிக்க வழி தேடும் ஜி.வி.பிரகாஷுக்கு ஒட்டுமொத்த குடியிருப்பும் கயாடு லோகரின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது. கயாடு லோகர் யார்? அவருக்குள் இருக்கும் அமானுஷ்யம் என்ன? அவரது பிடியில் இருந்து ஜி.வி.பிரகாஷ் தப்பித்தாரா, இல்லையா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது பரபரப்பான மீதி கதை. எதார்த் தமான நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் கலக்கியுள்ளார். அமானுஷ்யம் நிறைந்த அந்த வீட்டில் இருந்து அவர் தப்பிக்க முயற்சிக்கும் காட்சிகள் அசத்தல். நடிப்பில் நிறைய மேம்பட்டுவிட்டார். அழகான ராட்சசியாக கவரும் கயாடு லோகர் நடிப்பிலும் 'ஸ்கோர்' செய்துள்ளார். ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் அவர், சற்று பயமுறுத்தியும் இருக்கிறார். ஜி.வி.பிரகாஷின் மாமாவாக மாறன், நண்பனாக ஆதித்யா மற்றும் டி.எம்.கார்த்திக் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள். குமார் நடராஜன், ஹர்ஷு மகாராஜன், சுனிதா உள்ளிட்டோரும் பொருத்தமான தேர்வு. அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர் புல். சாம் சி.எஸ். இசை படத்துடன் ஒன்றவைக்கிறது. யூகிக்க முடியாத காட்சிகள் பலம். திரைக்கதையில் இன்னும் சுவாரசியம் இருந்திருக்கலாம். 4 ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மிருகத்தின் பின்னணியில் இன்னும் பயமுறுத்தி இருக்கலாம். ஆங்காங்கே லாஜிக் மீறல்களைத் தவிர்த்து இருக்கலாமே. ஹாலிவுட் படங்களைப் போல ரத்த காட்டேரி வகையிலான கதையில், காதல் காட்சிகளையும் இணைத்து லேசாக பயமுறுத்தி, சற்று ரசிக்கவும் வைத்துள்ளார் இயக்குநர் மாரியப்பன் சின்னா. 'இம்மார்ட்டல்' புது மிரட்டல் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/cinema/movie-review/a-blood-sucking-demoness-did-gv-prakash-escape-immortal-movie-review



