பாங்காக் தாய்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் பார் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தீ மளமளவென பரவியதுடன், கரும்புகை சூழ்ந்து கொண்டது. அலட்சியப்போக்கு இதனால், பாரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே தப்பி செல்ல முடியவில்லை. இந்த சம்பவத்தில் சிக்கி, 27 பேர் பலியாகி உள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல் தெரிவித்தது. இதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. அலட்சியப்போக்கால் விபத்து ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்பட்டது. ஜன்னலற்ற குளியலறை இந்த நிலையில், அடுத்தடுத்து பலர் பலியான நிலையில், உயிரிழப்பு 32 ஆக உயர்ந்து உள்ளது. 70 பேர் காயமடைந்திருந்த நிலையில், இன்று காலை வரை 15 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். பலர் ஜன்னலற்ற குளியலறையில் தப்பிக்க வழியின்றி உயிரிழந்து உள்ளது தெரிய வந்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/fire-in-thailand-bar-death-toll-rises-to-32




