ஜெம் நிறுவனர் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கு விசாரணையை 70 நாள் தாமதப்படுத்தியது ஏன் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``சிறுமிகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய மிருகம் ஜெம்வீரமணி மீதான வழக்கை முடித்து வைக்க இயலாது. விசாரணையை தீவிர படுத்துங்கள் என்று போக்சோ நீதிமன்ற பெண் நீதிபதி ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்ட பிறகும் 70 நாட்கள் விசாரணை நடத்த தாமதப்படுத்தியது ஏன் CM Sir. ஜெம் வீரமணி யாராலும் எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் வெங்கட்ரமணா, லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் பேரவை தலைவர் ஜே சி டி பிரபாகர் ஆகியோர் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையின் மர்மம் என்ன? ஜெம் வீரமணி எங்கள் குடும்ப நண்பர் என்று அமைச்சர்கள் பொதுவெளியில் அவரோடு மேடையில் இருந்த படி அறிவித்து விசாரணையை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறைக்கு சிக்னல் கொடுத்தது ஏன். முதலமைச்சரின் நண்பர்கள் ஆன ஆந்திர ரெட்டி கேங்க் நடத்தும் கனிம நிறுவனங்களிடம், ஜெம் வீரமணியின் கனிம நிறுவனங்களை அபகரித்துக் கொடுக்க நடைபெற்றதாக கூறப்படும் முயற்சிகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM Sir. உங்கள் மடியில் கனமில்லை என்றால் ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்துவிட்டு அவர்களை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த தயாரா CM Sir. முதல்வர் விஜய் கடந்த நான்கு மாதங்களில் பதிவான 160-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளை மறைத்துவிட்டு 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாலியல் வழக்கு குறித்து திடீரென ஆவேசமாக பேசும் முதலமைச்சரே நீங்கள் பிரச்சாரத்திற்காக மதுராந்தகம் வந்து கொண்டிருந்த போது சென்னை வண்டலூரில் பள்ளி மாணவியை காமுகர்கள் பலர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் தங்களுக்கு எழுதிக்கொடுத்த ஸ்கிரிப்ட்டில் இல்லையா CM Sir?" எனப் பதிவிட்டிருக்கிறார். “ஜெம் வீரமணி வழக்கில் புது வில்லன்!” - போட்டு உடைக்கிறார் ரஞ்சன் குமார் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/appavu-has-raised-various-questions-regarding-the-pocso-case-against-veeramani




