புதுடெல்லி, டெல்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மும்பை போலீசாருக்கு வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, டெல்லி செங்கோட்டையை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தார். மும்பை போலீசார் உடனடியாக இந்தத் தகவலை டெல்லி போலீசாருக்கு தெரிவித்தனர். இதன் பிறகு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் செங்கோட்டை வளாகம் முழுவதும் டெல்லி போலீசார் தீவிர சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இது ஒரு வதந்தி என போலீசார் தெரிவித்தனர். மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மைகாலமாக சற்று வெடிகுண்டு மிரட்டல் இல்லாமல் இருந்தவந்தநிலையில், மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி டெல்லியின் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/delhis-red-fort-gets-bomb-threat-turns-out-to-be-hoax




