சென்னை, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி 29ஆம் தேதி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு, சென்னை-பட்டினப்பாக்கத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில், புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை, சமீபத்தில் முதல்-அமைச்சர் விஜய், சட்டசபையில் வெளியிட்டார். இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த திட்டத்திற்கு அப்பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டம் இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி செப். 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீனவ மக்கள் முடிவு புதிய தலைமை செயலகம் அமையவுள்ள பகுதியை மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காததால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க மீனவ மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/tamilnadu/fishermen-to-stage-a-protest-on-the-29th-demanding-the-cancellation-of-the-government-order-for-the-construction-of-the-new-secretariat




