நியூயார்க் உக்ரைன், ஜெர்மனிக்கு எதிரான போக்கை கைவிடும்படி விடுத்த கோரிக்கையை ரஷியா நிராகரித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபையின் 81-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், ஜெர்மனி வெளியுறவு மந்திரி ஜோஹன் வாதேபுல் கோரிக்கையை தொடர்ந்து, ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் உடனான சந்திப்பு நடந்தது. நேட்டோ கூட்டணி அப்போது, ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் மற்றும் நேட்டோ கூட்டணிக்கு எதிரான ஆபத்தான ராணுவ போக்கை கைவிடும்படி கேட்டு கொண்டார். எனினும், இதனை லாவ்ரோவ் நிராகரித்து விட்டார். உக்ரைனுக்கு ஜெர்மனி தொடர்ந்து ராணுவ உதவி வழங்கி வருகிறது என்று கண்டனம் தெரிவித்த லாவ்ரோவ், 2-ம் உலகப்போரின் விளைவுகளை நினைவுப்படுத்தி எச்சரித்தார். லெய்ப்சிக் விமான நிலைய டிரோன் தாக்குதல் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தூதரகங்கள் மூடப்படும் அளவுக்கு பதற்ற நிலை நீடிக்கிறது. நிரந்தர உறுப்பினர் இந்த சந்திப்புக்கு முன்னர் உலக தலைவர்கள் முன் உரையாற்றிய லாவ்ரோவ், ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் எந்தவொரு முயற்சியையும் ரஷியா கடுமையாக எதிர்க்கும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/world/request-to-abandon-hostile-stance-against-ukraine-and-germany-russia-rejects-the-demand




