Full Article
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் - பெரியபாளையம் சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வாயுகசிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து சிறப்பு சிகிச்சை அளிக்க அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவுக்கும், ராஜ் மோகனுக்கும் ஆணையிட்டிருக்கிறார். திருவள்ளூர் - பெரியபாளையம் இதனை தொடர்ந்து அமைச்சர் ராஜ் மோகன், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோரை சந்தித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ், இருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் 60 பேர் பெண்கள் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Full article — see link below



