பெருமாளின் ஆயுதங்களில் முக்கியமானது சக்கரம். பெருமாளுக்கு என்ன பெருமை உண்டோ அது அவரின் சக்கரத்துக்கும் உண்டு என்பார்கள். அதனால்தான் அவரை சக்கரத்தாழ்வார் என்று போற்றும் வழக்கமும் இருக்கிறது. சக்கரத்தாழ்வாரை வழிபட்டாலே சகல கஷ்டங்களும் போகும் என்றாலும் பெருமாளை சக்கரம் தாங்கிய பெருமாளாக எண்ணி வழிபடுவது அதனிலும் சிறப்பு. அப்படி சக்கரம் தாங்கிய பெருமாளாக தன் திருநாமத்திலேயே அதற்கு முக்கியத்துவம் அளித்திருக்கும் பெருமாள் திருத்தலம் ஒன்று தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டிலும் உள்ளது. வல்லநாடு ஸ்ரீசக்கரபாணி பெருமாள் தூத்துக்குடி – நெல்லை நெடுஞ்சாலையில் தூத்துக்குடியிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலும், நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ தொலைவிலும் உள்ளது வல்லநாடு. பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது. மேற்கில் தாமிரபரணியும் கிழக்கில் வல்ல நாடு மலையும் அழகுற காட்சித்தர, பசுமையான வயல்வெளிகளுக்கு அருகில் அமைந்துள்ளது அருள்மிகு சக்கரபாணி பெருமாள் கோயில். ஶ்ரீதேவி-பூதேவி சமேதராக நின்றகோலத்தில் காட்சி தருகிறார், இந்தப் பெருமாள். சக்ராயுதம் தாங்கியிருப்பதால் சக்கரபாணி என்று திருப்பெயர். ‘ஆழி விளங்கும் பெருமாள்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. ‘ஆழி’ என்ற பதத்துக்கு பழம், சர்க்கரை, சுண்ணம் ஆகியவற்றால் ஆன கலவை என்றும் விளக்கம் தருவார்கள். இங்குள்ள மூலவர், கல்லில் செதுக்கப்பட்டு ஆழிக்கலவை மற்றும் மூலிகைப் பூச்சுகளால் ஆன திருமேனியராக அருள்கிறார். தென்மாவட்டக் கோயில்களில், இந்தக் கோயிலில் மட்டுமே இந்நிலையில் அருள்கிறாராம் பெருமாள்! மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. உற்சவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கே திருமஞ்சனம் நிகழ்கிறது. ஸ்தல விருட்சம் - அத்தி மரம். பரிகார வழிபாடுகளுக்குச் சிறப்புற்றுத் திகழ்கிறது இந்தத் தலம். வல்லநாடு ஸ்ரீசக்கரபாணி பெருமாள் கோயில் கிரக தோஷங்களால் திருமணத் தடை ஏற்பட்டு அவதியுறும் அன்பர்கள், தங்களின் ஜன்ம நட்சத்திர நாளில் இந்தக் கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றிவைத்து வழிபட்டால், தோஷப் பாதிப்புகள் விலகி விரைவில் கல்யாணம் கைகூடும். பிள்ளைப்பாக்கியம் வேண்டும் அன்பர்கள், இந்தப் பெருமாளுக்கு நெய்தீபம் ஏற்றி வைத்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, வழிபட்டால் விரைவில் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும். பெருமாளுக்கு நீராஞ்சன விளக்கேற்றி வழிபட்டால், தடைகள் நீங்கி காரியவெற்றி உண்டாகும். கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக் கிழமைகளில் இங்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறுகிறது. இந்த நாள்களில் நெய் தீபம் ஏற்றிவைத்துப் பெருமாளுக்குத் துளசி சாத்தி வணங்கினால், வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்; வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும். திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி கலங்காமல் காத்த விநாயகர்: தீராத பிரச்னைகளும் தீர்க்கும் கணபதி சந்நிதி! இந்தத் திருக்கோயிலில் முன் மண்டபத்தில் மகாலட்சுமித் தாயாரைத் தன் மடியில் அமர்த்தியபடி காட்சியளிக்கிறார், அருள்மிகு லட்சுமி ஹயக்ரீவர். இவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி, பச்சைப் பாசிப்பயறு பரப்பி அதன்மீது நீராஞ்சன விளக்கேற்றி வைத்து, தேன் நைவேத்தியம் செய்து வணங்கினால், பிள்ளைகள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். இவரின் அருகிலேயே தன்வந்திரி பகவானும் தரிசனம் தருகிறார். பிணிகள் நீங்கவும், ஆயுள் பலம் பெருகவும் தன்வந்திரி பகவானுக்குச் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபடுகிறார்கள். மட்டுமன்றி நவநீத கிருஷ்ணன், விஷ்வக்சேனர், பெரியாழ்வார், ராமாநுஜர், ஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். வல்லநாடு ஸ்ரீசக்கரபாணி பெருமாள் பிராகார மண்டபத்தில் தென்மேற்கு மூலை யில் ஶ்ரீசக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார்; இந்தச் சிலையின் பின்புறம் ஶ்ரீயோகநரசிம்மர் தரிசனம் தருகிறார். இந்தச் சந்நிதியில் துளசியால் அர்ச்சனை செய்து, நரசிம்மப் பெருமானுக்குப் பானகம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், தீவினைப் பாதிப்புகள் நீங்கும் என்கிறார்கள், பக்தர்கள். வல்லநாடு சித்தர்கள் வாழ்ந்த பூமி. வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும். நலமாகும். திருச்சி மாவட்டம், கோபுரப்பட்டி ஸ்ரீஆதிநாயகபெருமாள்: இவரை தரிசித்தால் வாழ்வில் உணவுப் பஞ்சமே வராது! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/spiritual/temples/tuticorin-vallanadu-chakrapani-temple




