தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 - ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர். போலீஸ் பாதுகாப்பு இந்த நிலையில், தாராபுரம் தனி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க- வில் இணைந்தார். தற்போது த.வெ.க கட்சி வேட்பாளராக மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்கியிருக்கிறார். இந்த விவகாரம் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமன்றி த.வெ.க மற்றும் விவசாய அமைப்புகள் மத்தியிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராகப் பிரசாரக் கூட்டங்களில் சிலர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சத்தியபாமா பிரசாரத்துக்கு 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிக்க அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்று பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.vikatan.com/government-and-politics/election/tharapuram-tvk-candidate-police-protection-for-campaign




