மத்திய மந்திரி அமித்ஷா நேற்று கேரளம் மாநி லம் கொல்லம் மாவட்டத்தில் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தார். இதற்காக மதியம் 2.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கொல்லம் ஆசிரா! மம் மைதானத்தில் வந்திறங்கினார். பின்னர் அங்கிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டார். அப்போது பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் மாநில செயல் தலைவர் பினு சுல்லியில் மற்றும் கவுன்சிலர் குருவிலா ஜோசப் ஆகியோர் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தியபடி திடீரென காரை வழிமறித்தனர்.இந்த சம்பவத்தின் போது, இந்தியாவின் ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் வலுக்கட்டாய மாக போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். பிறகு அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். இந்த திடீர் சம்பவத்தால் மத்திய மந் திரி அமித்ஷாவின் கார் சுமார் 5 நிமிடம் சாலையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் குண்டராவுக்கு புறப் பட்டு சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர், மாலை 5 மணிக்கு கருணாகப்பள்ளியில் மாதா அமிர்தானந்தமயி தேவி பிறந்த நாள் விழாவிலும் கலந்து கொண்டார். இதில் மத்திய இணை மந்திரி சுரேஷ் கோபி உள்பட பலர் பங்கேற்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
This is a Tamil summary for quicker reading. For the full report, extra context, and updates, open the original publisher.
Read Full Article
https://www.dailythanthi.com/news/india/congress-workers-intercept-union-minister-amit-shahs-car-sudden-commotion-in-kollam




